எல் நினோ பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சூப்பர் எல் நினோவின் தாக்கமாக, அடுத்த 3 வாரங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிக வெப்பநிலை நீடிக்கக்கூடும். பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட 3-4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம். இடையிடையே இரவில் வெப்பச்சலன மழை பெய்தாலும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிக நீர்ச்சத்து கொண்ட உணவுகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் நண்பகலில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நேரடி வெயிலைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
