உலக நாடுகளுக்கு நிம்மதிப் பெருமூச்சு! அமெரிக்கா – ஈரான் இடையே கத்தாரில் நாளை அவசரக் கூட்டம்  

Estimated read time 0 min read

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி போர் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், கடந்த வாரயிறுதியில் பெர்சிய வளைகுடா பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகள் மீண்டும் பரஸ்பரம் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர்ப் பதற்றம் தொற்றிக்கொண்டது.
எனினும், சர்வதேச நாடுகளின் கவலையை தொடர்ந்து இரு நாடுகளும் தற்காலிகமாக தங்களின் இராணுவத் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
மேலும், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோதலுக்கு தீர்வு காண, கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நாளை இரு நாட்டுப் பிரதிநிதிகளும் அவசரமாகச் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

You May Also Like

More From Author