தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவமாகும் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்காகத் தமிழ்நாடு அரசு மிகச்சிறப்பான முன்னெடுப்பு ஒன்றைச் செயல்படுத்தியுள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைளுக்கும் சொந்தத் தாய்மாமன் முறையில் 1 கிராம் தங்கம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் கோலாகலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் சிறப்புக் காட்சிகளும் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஏழை எளிய எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனைகளின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தாய்மார்களின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையிலும், அவர்களின் மருத்துவச் சேவைகளின் மீது நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலும் இந்தத் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இதற்கான பிரத்யேக ஏற்பாடுகளும் முன்னணி நிறுவனங்கள் மூலமான நகை விநியோகப் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் தொடர்பான ஸ்பெஷல் வீடியோ ஒன்றை முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருவதுடன், நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் இந்த மக்கள் நலப் பணியை பலரும் இணையத்தில் பகிர்ந்து தங்களது கருத்துக்களைத் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
