ஜப்பானிய அரசின் புதிய இராணுவவாத முயற்சிகளை தடுப்பதன் அவசியம்

இவ்வாண்டின் ஆகஸ்ட் 15ஆம் நாள், ஜப்பான் 2ஆவது உலகப் போரில் தோல்வி மற்றும் சரணடைந்ததை நினைவு கூரும் 81ஆவது தினமாகும். இப்போரில் ஈடுபட்ட முதல் நிலை போர் குற்றவாளிகளாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ராணுவ அதிகாரிகளின் நினைவாக போற்றப்படும் யசுகுனி கல்லறையில் ஜப்பானிய வலது சாரி அரசியல்வாதிகள் இந்த நாளில் அஞ்சலி செலுத்தினர். தனது ஆக்கிரமிப்பு குற்றங்களுக்கு மன்னிப்பு  கேட்க மறுத்தல், தனது மறு இராணுவமயமாக்கலைத் துரிதப்படுத்துதல், அணு ஆயுதங்களை வைத்து கொள்வதாக பேச்சுக்கள் போன்ற ஜப்பானிய அரசின் செயல்களால் அந்நாட்டிலும் வெளிநாட்டிலும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. புதிய இராணுவவாதம் தொடர்புடைய ஜப்பானின் சில முயற்சிகள் சர்வதேச சமூகங்கள் உயர் மட்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

முதலாவது, ஜப்பானிய அரசு ஆக்கிரமிப்பு வரலாற்றைத் திரித்து எழுதவும், போர் குற்றங்களை மூடி மறைக்கவும் முயற்சித்து வருகின்றது. ஜப்பானிய வலது சாரி சக்திகள் வரலாற்று பாடப்புத்தகத்தின் அம்சங்களை தொடர்ந்து திரித்து எழுதி, தனது ஆக்கிரமிப்பு போரை மறுத்து பூசிமெழுகுவதில் ஈடுபட்டு வருகின்றது. ஜப்பானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின்படி, ஆக்கிரமிப்பு போரை பூசிமெழுகி, அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை மிகைப்படுத்தவும் செய்யும் காணொளிகளை உருவாக்கிப் பரப்புவதற்க்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வல்லுநர்களையும் ஜப்பானிய வலது சாரி சக்திகள் பணியமர்த்தியுள்ளன.

இரண்டாவது, ஜப்பான் இராணுவ விரிவாக்கத்தை விரைவுப்படுத்தி வருகின்றது. கெய்ரோ அறிக்கை, போட்ஸ்டாம் அறிக்கை மற்றும் ஜப்பானின் சரணடைதல் ஆவணங்கள் ஆகிய சர்வதேச சட்டத்தின் முழு வலிமையைக் கொண்ட ஆவணங்களின்படி, ஜப்பான் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றும், மீண்டும் ஆயுதம் ஏந்த வழிவகுக்கும் எந்தவொரு தொழிற்சாலைகளையும் பராமரிக்கக் கூடாது என்றும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. ஜப்பானின் தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது விதிமுறையின்படி, ஒரு தேசத்தின் இறையாண்மை உரிமை என்ற பெயரில் போர் தொடுப்பதையும், சர்வதேசப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறையாகப் படைபலத்தைப் பயன்படுத்துவதையும் ஜப்பான் என்றுமே கைவிடுகின்றது என்று கூறப்படுகின்றது. ஆனால், தற்போதைய ஜப்பானிய அரசு தொடர்புடைய செயல்களின் மூலம் போருக்குப் பிந்தைய காலத்தின் தனங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட முயற்சித்து வருகின்றது.

மூன்றாவது, ஜப்பானிய வலது சாரி சக்திகள், அணு ஆயுதங்களை கொள்வதற்காக ஊடகத் துறையில் பரவல் செய்வதோடு, அடித்தளத்தை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.

You May Also Like

More From Author