ஆங்கில மொழியில், reciprocal என்பதற்கு, சமம் என்றும் மட்டுமல்லாமல் பரஸ்பர நலன் என்று பொருளும் உண்டு. அனைத்து தரப்பினரும் முற்றிலும் சமமான சுங்க வரியைக் கொண்டிருக்க வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பு ஒருபோதும் கோரவில்லை.
உண்மையில், இதற்கு சாத்தியம் இல்லை. அப்படி இருந்தால் அதுவும் நியாயமற்றது. வளரும் நாடுகளின் மீதான சுங்க வரியைக் குறைப்பதன் வாக்குறுதியிலிருந்து பரஸ்பர நலன்களைப் பெற வளர்ந்த நாடுகள் எதிர்பார்ப்பதில்லை என்றும், தங்களது வளர்ச்சி, நிதி மற்றும் வர்த்தக தேவைக்கு முரணான சுங்க வரி குறைக்கவும் சலுகையை வழங்கவும் வளரும் நாடுகளுக்கு கோரிக்கை விடுக்க முடியாது என்றும் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் இல்லாதது (NON-RECIPROCITY) என்பது, பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையின் கீழ் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முக்கிய கோட்பாடு ஆகும்.
ஆனால், அமெரிக்க அரசு, தவறான கருத்தை பரப்பி, சமம் என்பதைப் பேணிக்காக்க வேண்டும் என்ற பெயரில், வர்த்தக பாதுகாப்புவாதத்தை செயல்படுத்தி வருகின்றது. இது, உலகளாவிய வர்த்தக வளர்ச்சியை கடுமையாக பாதித்து வருகிறது.
தவிர, மேலும் விரிவான கோணத்திலிருந்து பார்த்தால், அமெரிக்கா தற்போதைய சர்வதேச வர்த்தக அமைப்புமுறையிலிருந்து பலன் அடைந்து வருகிறது. சேவை வர்த்தகத் துறையில் அமெரிக்கா நீண்டகாலமாக சாதனமாக நிலுவையைக் கொண்டிருக்கின்றது. 2024ஆம் ஆண்டில் இத்துறையில் அதன் சாதனமாக நிலுவை அளவுக்கு 3ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் இருந்தது. அமெரிக்க நிறுவனங்கள் ஆண்டுதோறும் 14ஆயிரத்து 400கோடி அமெரிக்க டாலருக்கு மேலான அறிவுசார் சொத்துரிமைக்கான அனுமதி கட்டணங்களை சேகரிக்கின்றன. சேவை வர்த்தக ஏற்றுமதி, அமெரிக்காவில் 41இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா இந்த உண்மைகளைப் புறக்கணித்து, லாபம் மற்றும் இழப்புகளை அளவிடுவதற்கான ஒரே அளவுகோலாக சரக்கு வர்த்தகத்தைக் கருதியது. பொருளாதார உறவுகளில் அமெரிக்கா இழப்புகள் அடைந்து வருகின்றது (rip-off) என்ற கூற்று, தவறானதாகவும் ஒருதலைப்பட்சமானதாகவும் உள்ளது.