இந்திய சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் விளையாடி வந்த ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் 100 சதவீதப் பங்குகளை டாடா ஸ்டீல் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
கோவாவை சேர்ந்த சர்ச்சில் பிரதர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவனத்திற்கு வெறும் 100 ரூபாய் என்ற அடையாளத் தொகைக்கு இந்த பங்குகள் மாற்றப்பட்டுள்ளன.
இதன் மூலம் இந்திய சூப்பர் லீக் தொடரின் நேரடி அணி உரிமையாளர் பொறுப்பில் இருந்து டாடா ஸ்டீல் நிறுவனம் முழுமையாக விலகியுள்ளது.
அதேவேளையில் இரண்டு முறை ஐ-லீக் சாம்பியனான சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய டாடா ஸ்டீல்: சர் சர்ச்சில் பிரதர்ஸ் ஒப்பந்தம்
