சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜோர்டான் மன்னருடன் பேச்சுவார்த்தை

Estimated read time 0 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 24ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங்கில் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், பிரதேசத்தில் ஜோர்டானின் தனிச்சிறப்பு மற்றும் முக்கிய பங்கில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஜோர்டானுடன் அரசு, அரசியல் கட்சிகள் முதலிய பல்வேறு நிலைகளில் ஆட்சிமுறை அனுபவப் பரிமாற்றத்தை சீனா வலுப்படுத்த விரும்புகிறது. வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், அடிப்படை வசதிக் கட்டுமானம், செயற்கை நுண்ணறவு, பசுமை எரியாற்றல் முதலியவற்றில் இரு தரப்பும் ஒத்துழைப்பை மேலும் முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

இரண்டாம் அப்துல்லா கூறுகையில், சீனா ஒரு மாபெரும் நாடாகும். ஷிச்சின்பிங்கின் தலைமையில் சீனா மிகப் பெரிய வளர்ச்சிச் சாதனைகளைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், இரு நாட்டுத் தலைவர்கள் மத்தியக் கிழக்குப் பிரதேச நிலைமை பற்றியும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின், இரு தரப்பு நெடுநோக்குக் கூட்டாளியுறவை ஆழமாக்குவது பற்றி சீன மக்கள் குடியரசு மற்றும் ஜோர்டான் ஹஷிம் மன்னராட்சி அரசின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

You May Also Like

More From Author