சீனாவில் வணிக வலையமைப்பு மேம்பாடு

Estimated read time 0 min read

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஆகஸ்டு 18ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சீன வணக அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் சேவையளிக்கும் வணிக வலையமைப்பு படிப்படியாக மேம்பட்டு, அதன் மூலம் நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கிராமப்புறங்களின் பன்முக வளர்ச்சிக்குத் துணைப் புரிகிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 2021ஆம் ஆண்டு முதல் இதுவரை, மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் 3600க்கும் மேலான சரக்கு போக்குவரத்து தளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் 10 கோடிக்கும் மேலான விரைவஞ்சல் பார்சல்கள் கிராமங்களுக்கு கொண்டு செல்வதுடன், கிராமங்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் பிற பகுதிகளுக்கு எடுத்துச செல்லப்படுகின்றன. விவசாயப் பொருட்களின் விநியோகச் சங்கிலியின் வளர்ச்சி முறை மாற்றம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author