லாவோஸ் மக்கள் புரட்சி கட்சியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான டுங்லுன் நவம்பர் 11ம் நாள், வியண்டியனில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், பரப்புரை துறை அமைச்சருமான லீ ஷு லேயைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது லீ ஷு லேய் கூறுகையில், லாவோஸுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, இரு கட்சிகளின் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் ஆழமாக்கி, வர்த்தகம், ஊடகம், பண்பாடு, சுற்றுலா முதலிய துறைகளின் ஒத்துழைப்பை விரிவாக்கி, உயர் வரையறை, உயர் தரம் மற்றும் உயர் நிலையில் சீன-லாவோஸ் பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு வாழ்த்து தெரிவித்த டுங்லுன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன நவீனமயமாக்கம் பெற்றுள்ள சாதனைகளைப் பாராட்டினார்.
