பெய்ஜிங்கில் 2026 வறுமை குறைப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய உயர்நிலை மன்றக் கூட்டம் நடைபெற்றது

2026ஆம் ஆண்டு வறுமை குறைப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய உயர்நிலை மன்றக் கூட்டம் மே 27ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் அரசவையின் துணைத் தலைமை அமைச்சருமான லியூ கோச்சொங் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். வறுமை குறைப்பில் சீனாவின் நடைமுறைகள் மற்றும் அனுபவங்கள் உலகிற்கு சீனாவின் ஞானம் மற்றும் திட்டத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இம்மன்றக் கூட்டத்தில், வறுமை குறைப்பு மற்றும் வளர்ச்சிக்கான உலகளாவிய கூட்டமைப்பின் உருவாக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, இதர 53 நாடுகள் மற்றும் 9 சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்பட்ட இக்கூட்டமைப்பு, உலகளாவிய வறுமை குறைப்பு லட்சியம் புதிய பயணத்துக்குச் செல்வதில் முக்கிய காலடியாகும்.

You May Also Like

More From Author