சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜூன் 30ஆம் நாள், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவினைத் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டார்.

அப்போது வாங்யீ கூறுகையில், இவ்வாண்டின் மே திங்களில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பும் பெய்ஜிங் மாநகரில், நெடுநோக்கு நிலைத் தன்மையுடன் கூடிய ஆக்கபூர்வமான சீன-அமெரிக்க உறவை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய ஒத்தக் கருத்துக்களை எட்டி, சீன-அமெரிக்க உறவுக்கான வளர்ச்சித் திசையை எடுத்துக்காட்டியதை நினைவுகூர்ந்தார்.

நிலைத் தன்மை மற்றும் ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு உறவை உருவாக்கும் வகையிலான நடைமுறையாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வாங்யீ கேட்டுக் கொண்டார்.

இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் இந்தத் தொடர்பானது ஆக்கப்பூர்வமானதாக விளங்கியது. இதனை மேலும் வளைந்து கொடுக்கும் வழிமுறையின் மூலம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒருமனதாகக் கருத்துகளை தெரிவித்தனர்.

You May Also Like

More From Author