அடுத்த 5 ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்துக்குச் சீனா மிகப் பெரிய பங்காற்றும். சீனாவின் பங்கு விகிதம், ஜி7 நாடுகளின் மொத்த பங்கு விகிதத்தைத் தாண்டி, அமெரிக்காவின் பங்கு விகிதத்தை விட 1 மடங்கு அதிகம் என்று அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம், சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட புதிய பொருளாதார மதிப்பீட்டுத் தரவுகளின்படி மதிப்பிட்டுள்ளது.
2024 முதல் 2029ஆம் ஆண்டு வரை, உலகளவில் புதிதாக அதிகரிக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளில், சீனாவின் விகிதம் 21 விழுக்காட்டை எட்டக்கூடும். ஜி7 நாடுகள் மற்றும் அமெரிக்காவின் விகிதம் முறையே 20 மற்றும் 12 விழுக்காட்டை எட்டக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 5 ஆண்டுகளில், சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகள், உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு 50 விழுக்காட்டுக்கும் மேலான விகிதத்தை பங்காற்றும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.