தமிழகம் முழுவதும் தடை உத்தரவு திடீர் வாபஸ்…

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகள் மற்றும் CJP சார்பில் நடத்தப்படும் போராட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பதைத் தடை செய்யக் கோரி கல்லூரிக் கல்வி இயக்ககம் பிறப்பித்த உத்தரவு, கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.

முன்னதாக, இடதுசாரிகள் மற்றும் CJP அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் பள்ளி, உயர்கல்வித் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

மேலும், குஜிலியம்பாறையில் உள்ள இடதுசாரி உறுப்பினர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்க வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்த சம்பவமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து கடும் கண்டனங்கள் குவிந்தன. மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாகப் பலரும் சுட்டிக்காட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

மேலும் மாநிலம் முழுவதும் எதிர்ப்பு தீவிரமடைந்த நிலையில், நிலவிய அரசியல் அழுத்தத்தின் காரணமாகஅரசு தனது முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாணவர் பங்கேற்பைக் கட்டுப்படுத்தக் கோரி வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை முழுமையாகத் திரும்பப் பெறுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author