நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றம் மற்றும் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இதனையொட்டி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு… pic.twitter.com/uYu2tM2dnX
— Ilaiyaraaja (@ilaiyaraaja) September 14, 2025
இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, “நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கும், உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                             
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                