சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக சரிந்துள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 2040 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 97,720 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12215 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 13604 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,08,832 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையில் மாற்றம் என்று ஒரு கிராம் 190 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,90,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
