அடுத்தடுத்து டெல்லி குவியும் அமைச்சர்கள்!

Estimated read time 0 min read

தமிழக அமைச்சர்கள் பலரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிறகு டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் விஜய். முதலமைச்சர் பயணித்த தனி விமானம் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் பலரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஏற்கனவே தலைநகர் டெல்லியில் அமைச்சர்கள் ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா , ராஜ்மோகன் உள்ளிட்டோர் துறைசார்ந்த சந்திப்புகளை நடத்தி வரும் நிலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி டெல்லி வந்துள்ளார். மத்திய அமைச்சர்களை சந்தித்து நிதியை பெற மும்முரம் காட்டிவருகின்றனர்.

முன்னதாக கல்வி நிதி விடுவிக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தியும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை கல்வி அமைச்சர் ராஜ்மோகன் சந்தித்தார். இதேபோல் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இன்று (17.11.2026) டெல்லியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலை நேரில் சந்தித்து நிதி கோரினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author