ஜம்மு-காஷ்மீர் குல்காம் அருகே துப்பாக்கிச்சண்டை; பயங்கரவாதி சுட்டுக் கொலை

Estimated read time 1 min read

குல்காம் அருகே பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரின், குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், குல்காம் சுற்றுவட்டாரப் பகுதியில் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்புக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். தாக்குதலில் உயிரிழந்த நபர், குல்காம் மாவட்டம் க்ரேவான் பகுதியைச் சேர்ந்த முகமது லத்தீப் பட் என்றும், சம்பவ இடத்தில் இருந்து பயங்கரவாதியின் உடல் மற்றும் ஆயுதம் மீட்கப்பட்டதாகவும் காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author