ஜோதிடரை OSD-யாக நியமனம் செய்த ஆணையை ரத்து செய்தது தமிழக அரசு  

Estimated read time 1 min read

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது அரசியல் பிரிவு தனி அலுவலராக (OSD) நியமிக்கப்பட்டிருந்த ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை ரத்து செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஜோதிடர் அரசுப் பதவியில் அமர்த்தப்படுவது நிர்வாக ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் ஏற்புடையது அல்ல எனப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடைபெற்றபோதும் இது குறித்து தேமுதிக MLAவும், பொதுசெயலாளருமான பிரேமலதா இது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார்.

You May Also Like

More From Author