உலகமே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் பாடல்…!

Estimated read time 1 min read

இசை உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான கிராமி விருதுகளின் 2027-ஆம் ஆண்டுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது. 69-வது கிராமி விருதுப் போட்டியில் பிரிட்டிஷ் பாடகியும் பாடலாசிரியருமான ரே, அதிகபட்சமாக 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் இந்த ஆண்டு அதிக பரிந்துரைகளைப் பெற்ற கலைஞராக அவர் முன்னிலை வகிக்கிறார்.

ஸ்பானிஷ் பாடகி ரோசாலியா 9 பிரிவுகளிலும், எலா லாங்லி 7 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மிராண்டா லாம்பர்ட், ஒலிவியா ரோட்ரிகோ, ஃபோப் பிரிட்ஜர்ஸ் ஆகியோருக்கும் தலா 7 பரிந்துரைகள் கிடைத்துள்ளன. புருனோ மார்ஸ், லியோன் தாமஸ், ஒலிவியா டீன் ஆகியோர் தலா 6 பிரிவுகளில் இடம்பிடித்துள்ளனர்.

View this post on Instagram

A post shared by RAYE

🇬🇧

🇨🇭

🇬🇭

(@raye)

இந்தியாவைப் பொறுத்தவரை, ‘துரந்தர் 2’ திரைப்படத்தின் சார்பில் பல்வேறு பிரிவுகளுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டிருந்தாலும், இறுதிப் பட்டியலில் ஒரு பிரிவில்கூட இடம் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், தேவன் ஏகாம்பரம் மற்றும் சுஷா பாடிய ‘வருவாய்’ என்ற தமிழ் பாடல், சிறந்த உலக இசை நிகழ்ச்சி பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமி விருதுப் பரிந்துரைப் பட்டியலில் தமிழ் பாடல் இடம்பெற்று கவனம் ஈர்த்துள்ளது.

ஆண்டின் சிறந்த இசைத் தொகுப்பு பிரிவில் ஃபோப் பிரிட்ஜர்ஸின் ‘லாஸ்ட் வீக்கெண்ட்’, ஒலிவியா டீனின் ‘தி ஆர்ட் ஆஃப் லவ்விங்’, எலா லாங்லியின் ‘டேன்டெலியன்’, புருனோ மார்ஸின் ‘தி ரொமான்டிக்’, ரேயின் ‘திஸ் மியூசிக் மே கெண்டெய்ன் ஹோப்’, ஒலிவியா ரோட்ரிகோவின் ‘யூ சீம் பிரிட்டி சாட் ஃபார் எ கேர்ள் சோ இன் லவ்’, ரோசாலியாவின் ‘லக்ஸ்’, டெய்லர் ஸ்விஃப்ட்டின் ‘தி லைஃப் ஆஃப் எ ஷோகேர்ள்’ ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author