மண்டல பூஜையின் இரண்டாவது நாள்; அதிகரித்து காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்

Estimated read time 1 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்தின் இரண்டாம் நாள் தரிசனத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளில் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மண்டல காலத்தின் இரண்டாம் நாள் தரிசனத்திற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி 18-ம் படியேறி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கேரள பாரம்பரிய சுவையுடன் ‘சத்யா’ விருந்துடன் கூடிய புதிய அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய உணவுப் பட்டியலின்படி, காலையில் இட்லி, தோசை, மதியம் பாயசத்துடன் கூடிய கேரள சைவ விருந்து, இரவில் கஞ்சி மற்றும் பயறு ஆகியவை வழங்கப்படுகின்றன. தினமும் ஒரு இனிப்பு வகையும் இதில் இடம்பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 5,000 பக்தர்கள் உணவருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தில், உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தைக் கண்காணிக்க 12 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author