ஓ.சி.சி.சி.எம் கூட்டத்தில் கோப்31 அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது

Estimated read time 1 min read

ஓ.சி.சி.சி.எம் எனும் இணக்க கார்பன் சந்தைக்கான திறப்புக் கூட்டணி 16ஆம் நாள் ஐ.நாவின் 31ஆவது காலநிலை மாற்ற மாநாட்டின் (COP31) அமைச்சர்கள் நிலை கூட்டத்தை நடத்தியது. சீனா, பிரேசில் உள்ளிட்ட 15 நாடுகள் மற்றும் பிரதேசங்களையும் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளையும் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். கோப் 31க்கான சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவரும், சீனச் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் துணை அமைச்சருமான லீகாவ் இக்கூட்டணியின் இணைத் தலைவராகக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இக்கூட்டணியின் கோப் 31 அறிக்கை இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டில் ஈட்டியுள்ள முன்னேற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் கூட்டத்தின் போது, இந்தோனேசியா, தென் கொரியா இக்கூட்டணியின் புதிய உறுப்பு நாடுகளாக ஏற்கப்பட்டுள்ளன. கூட்டணியின் 2027ஆம் ஆண்டுக்கான முக்கிய பணிகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author