சிட்சாங்கைக் கண்டறிதல் என்ற தலைப்பிலான கதைப் பகிர்வு கூட்டம் ஆகஸ்ட் 19ஆம் நாள் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் இன மற்றும் மத விவகாரக் கமிட்டியின் துணைத் தலைவரும், சீன மனித உரிமைகள் ஆய்வு சங்கத்தின் துணைத் தலைவருமான ஜியாங் ஜியன்கோ, நேபாள தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மகார், சீனா மற்றும் நேபாளத்தின் பல்வேறு துறையினர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், மனித உரிமைகளை மேம்படுத்தி உத்தரவாதம் செய்வதற்கு முக்கியத்துவம் அளித்து வரும் சீனாவை மகார் பாராட்டினார். மேலும், சீனாவின் மனித உரிமைகள் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம், மனித உரிமைகளை மேம்படுத்தி உத்தரவாதம் செய்வதற்கு மிக முக்கியமானது என்றும், மனித உரிமைகள் துறையில் சீனாவுடன் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
நடப்புக் கூட்டத்தில், சிட்சாங்கின் நிலைத்தன்மை, வளர்ச்சி, இயற்கைச் சூழல், எல்லை பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில், திறந்த சிட்சாங், உயிராற்றல் மிக்க சிட்சாங், இணக்கமான சிட்சாங், பசுமையான சிட்சாங் ஆகிய 4 பிரிவுகள் அமைக்கப்பட்டன. இருநாட்டு விருந்தினர்கள் உணர்ச்சி ததும்பும் கதைகள் மற்றும் படங்களின் மூலம், உண்மையான சிட்சாங்கை முழுமையாக வெளிப்படுத்தினர்.
