14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் பெய்ஜிங்கில் துவக்கம்

Estimated read time 0 min read

14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர், மார்ச் 5ஆம் நாள், பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது.

8 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தொடரில், சீனாவின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து, தேசிய இனத்தவர்கள், தொழில் துறையினர்கள் உள்ளிட்ட 2700க்கும் மேல் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

அரசு பணியறிக்கை மற்றும் சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்ட வரைவு, சீன மக்கள் குடியரசு உயிரின சுற்றுச் சூழல் வரைவு சட்டம், சீன மக்கள் குடியரசு தேசிய இன ஒற்றுமையை விரைவுபடுத்தும் வரைவு சட்டம், சீன மக்கள் குடியரசு நாட்டின் வளர்ச்சி திட்டமிடல் குறித்த வரைவு சட்டம், உச்ச நீதி மன்றம் மற்றும் உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் கட்சிக் குழுப் பணியறிக்கைகள் ஆகியவை இந்த கூட்டத்தொடரில் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.

2026ஆம் ஆண்டு சீனத் தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி வரைவுத் திட்டம், மத்திய மற்றும் பிரதேசங்களின் வரவு செலவுக்கான வரைவுத் திட்டம் முதலியவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author