நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முன்னரே கணித்த 6.7 சதவீதத்தை விட அதிகரித்து 7 சதவீதத்தை எட்டும் என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பூனம் குப்தா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிலவிய வலுவான பொருளாதார செயல்பாடுகளே இந்த வளர்ச்சிக்கு முதன்மை காரணியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
7.5% வளர்ச்சி நிச்சயம்! ரிசர்வ் வங்கியின் கணிப்பையும் தாண்டும் இந்தியப் பொருளாதாரம்; துணை ஆளுநர் பூனம் குப்தா நம்பிக்கை
