ஏபெக் சுங்கத்துறை மற்றும் வணிக துறை உரையாடல் கூட்டம் 20 மற்றும் 21ஆம் நாள் சீனாவின் டாலியன் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், ஏபெக்கைச் சேர்ந்த பிற பொருளாதாரங்களுடன் சீனா மேற்கொண்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 18.03 லட்சம் கோடி யுவானை எட்டி, முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதம், இதே காலகட்டத்திலான சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக இருந்ததோடு, பிரதேசப் பொருளாதார ஒத்துழைப்பின் பெரிய உள்ளார்ந்த ஆற்றலையும் வெளிக்காட்டுகிறது.
