மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு

Estimated read time 1 min read

மகாராஷ்டிராவின் பிவண்டியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
பாலாஜி நகரில் உள்ள கோஹினூர் கட்டிடத்தில் இரவு சுமார் 11:30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளது.
ANI- யின் சமீபத்திய தகவலின்படி, ஒன்பது பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
உள்ளூர் அதிகாரிகளால் அபாயகரமானது என அறிவிக்கப்பட்டிருந்த இந்தக் கட்டிடம், இடிந்து விழுந்த நேரத்தில் பழுதுபார்க்கும் பணியில் இருந்தது.

You May Also Like

More From Author