ராஜ்யசபாவில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜ்ய சபையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
இந்த தருணத்தில், நாட்டுக்காக அவர் செய்த பல பங்களிப்புகளை நினைவு கூர்ந்து, அவரை பாராட்டினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே.
மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்த அவரது பொருளாதாரக் கொள்கைகளை பற்றி, தற்போதைய தலைவர்கள் மறந்துவிட்டனர் என்றும் விமர்சித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கார்கே வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மன்மோகன் சிங்கின் ஓய்வுடன் “ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது” என்று கூறினார்.
முன்னாள் பிரதமர் நடுத்தர வர்க்கத்தினருக்கும், அரசியல் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் ஒரு “ஹீரோ” ஆக இருப்பார் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறினார்.

You May Also Like

More From Author