இந்தோனேசிய அரசுத் தலைவர் பிரபோவோ 21ஆம் நாள் ஜகார்த்தாவில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி மற்றும் சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங்ஜுன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, இந்தோனேசிய-சீன பன்முக நெடுநோக்குப் பேச்சுவார்த்தை அமைப்பு முறை மற்றும் 2+2 பேச்சுவார்த்தை அமைப்பு முறையின் பங்கு மற்றும் சாதனையை பிரபோவோ வெகுவாகப் பாராட்டினார். மேலும் சீனாவுடன் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தோனேசியா விரும்புகிறது. மேலதிக சீன தொழில் நிறுவனங்கள் இந்தோனேசியாவில் முதலீடு செய்து, தொழில் புரிவதை வரவேற்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
வாங்யி கூறுகையில், அரசியல், பொருளாதாரம், எரியாற்றல் மற்றும் கனிமம், இராணுவம், பாதுகாப்பு முதலிய துறைகளில் சீனா இந்தோனேசியாவுடனான ஒத்துழைப்புகளைப் பன்முகங்களிலும் முன்னேற்றி, தத்தமது நாட்டின் வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கு புதிய உந்து சக்தியை இடைவிடாமல் வழங்கி, பிரதேச அமைதி மற்றும் நிதானத்துக்கு ஆக்கப்பூர்வ பங்கு ஆற்ற விரும்புகிறது என்று தெரிவித்தார்.
