சீன மக்கள் அரசியல் கலந்தாய்வின் தேசிய கமிட்டியின் நிரந்தர உறுப்பினரும், தேசிய இன மற்றும் மத விவகார ஆணையத்தின் துணை இயக்குநரும், சீன மனித உரிமை ஆய்வுச் சங்கத்தின் நிரந்தர துணைத் தலைவருமான ஜியாங் ஜியான்குவோயின் தலைமையில், சீன மனித உரிமை ஆய்வுச் சங்கத்தின் பிரதிநிதிக் குழு ஆகஸ்ட் 18 முதல் 21ஆம் நாள் வரை நேபாளத்தில் மனித உரிமை பரிமாற்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இப்பயணத்தின் போது, ஜியாங் ஜியான்குவோ, ஷிசாங்கைக் கண்பது என்ற கதைப் பகிர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். நேபாளத்தின் வெளியுறவு அமைச்சகத்தின் நிரந்தரச் செயலாளர், நேபாளத்தின் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஆகியோரை முறையே சந்தித்தார்.
நேபாளத்தின் பல்வேறு வட்டாரத்தினர்கள் சீன மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை வெகுவாகப் பாராட்டினர். நவீனமயமாக்கத்தை நனவாக்கும் போக்கில், உள்ளூர் பண்பாடு மற்றும் பழக்கங்களுக்கு மதிப்பளிக்கும் போது, இயற்கைச் சூழலையும் ஆக்கப்பூர்வமாகப் பாதுகாக்கும் புதிய ஷிசாங், நேபாளத்தின் வளர்ச்சியைப் பொறுத்த வரை படிக்கப்படத்தக்கது என்றும் தெரிவித்தனர்.
