30ஆம் நாளிரவு, சீனச் சர்வதேச மீட்பு அணியின் 118 மீட்புப் பணியாளர்கள், மீட்பு உதவி உபகரணங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைப் பொருட்களுடன் மியான்மாரைச் சென்றடைந்தனர். இதனிடையில், சீனாவின் அரசு மற்றும் அரசு சாரா பல மீட்புப் படைகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மாரின் பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளை முழு மூச்சுடன் மேற்கொண்டு வருகின்றன. உள்ளூர் மீட்புப் படையினரின் உதவியுடன், இதுவரை, 4பேர் வெற்றிகரமாக உயிருடன் மீட்டுள்ளனர். சீனாவிலிருந்து மேலதிக மீட்புப் படையினர்கள் மியான்மாரைச் சென்றடைந்து வருகின்றனர்.
மியான்மார் தேசிய நிர்வாக ஆணையம் 30ஆம் நாள் மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, கடும் நிலநடுக்கத்தால் அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1700ஆக அதிகரித்தது. சுமார் 3400பேர் காயடைந்தனர். 300பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், நில அதிர்வுகள் அவ்வப்போது ஏற்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30ஆம் நாள் பிற்பகல் 1:38மணியளவில், மீட்புப் பணி மேற்கொண்ட போது, மண்டலே மாநிலத்தில் ரிக்டர் அளவு கோலில் 5.2 பதிவான நிலடுக்கத்தால் மீட்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.