மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச அளவில் எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பாதையை புதிய அமெரிக்கப் பகுதி என சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் மீண்டும் பகிர்ந்துள்ளார்.
ஜலசந்தியைத் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், ஈரானும் இதற்கு இணையான அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி இனி அமெரிக்காவுக்கே சொந்தம்! புதிய மேப் வெளியிட்டு டொனால்ட் டிரம்ப் அதிரடி
