ஜப்பானின் வடக்கு கடலோரப் பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகல் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இவாடே மாகாணத்தில் உள்ள குஜி துறைமுகத்தில் சுமார் 80 சென்டிமீட்டர் (31 அங்குலம்) உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கியதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.
இவாடே, ஆமோரி மற்றும் ஹொக்கைடோவின் தென்கிழக்கு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: கடற்கரையைத் தாக்கிய சுனாமி அலைகள்; அவசர எச்சரிக்கை
