ரஷ்ய அரசின் புதிய முடிவின்படி, 2025ம் ஆண்டில் இந்தியர்கள் ரஷ்யாவுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
கல்வி, தொழில் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் ஆண்டுதோறும் ரஷ்யா செல்கின்றனர்.
அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ நகர சுற்றுலா நிர்வாக குழு தலைவர் எவ்ஜெனி கோஸ்லோவ் கூறும் போது, “இந்தியர்களுக்கு விசா இல்லாமல் ரஷ்யா வருவதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தம் தயாராகி வருகிறது. விரைவில் இது அமலுக்கு வரும்,” என்றார்.
இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் காரணமாக இந்தியா, ரஷ்யா யின் முக்கிய சுற்றுலா சந்தையாக மாறியுள்ளது.