2025ஆம் ஆண்டில், சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி 73 ஆயிரம் கோடி யுவானுக்கு அதிகமான புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கடன்களை வழங்கியுள்ளது. இக்கடன்கள் செயற்கை நுண்ணறிவு, மனித உருவ ரோபோ, உயர் நிலை கருவிகள் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டின் இறுதி வரை, இவ்வங்கியின் அறிவியல் தொழில்நுட்ப கடன் நிலுவை 1.54 லட்சம் கோடி யுவான் ஆகும். இது மொத்த நிறுவனக் கடன்களில் சுமார் 50 சதவீத பங்கு வகிக்கிறது.
சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி சிறப்பு நிதி சேவை திட்டங்களை உருவாக்கி, சர்வதேச வணிகத்தில் அதன் தனித்துவமான நன்மைகளைப் பயன்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்முயற்சியின் கீழ் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் ஒத்துழைப்பையும் புத்தாக்கத்தையும், தொழில்துறை சங்கிலியின் உலகளாவிய கட்டமைப்பையும் ஆதரித்து, அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உலகளாவிய உத்தியை விரைவுபடுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
