இன்று முதல் தமிழகம் முழுவதும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்  

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
இதற்கான சிறப்பு ஏற்பாடாக, தமிழகம் முழுவதும் இன்று, அக்டோபர் 28 முதல் அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கெனவே தெரிவித்தார்.
சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள், மற்ற பகுதிகளில் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்க 1.22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author