தமிழக பெண்களே…! .இனி 3 சிலிண்டர் வருஷத்துக்கு இலவசம்…

Estimated read time 1 min read

தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். குடும்பத் தலைவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டம் வரும் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும் என பேரவையில் உரையாற்றிய போது முதலமைச்சர் குறிப்பிட்டார். பண்டிகைக் காலத்தில் ஏழை, எளிய குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியான பயனாளிகளுக்கு இச்சலுகை தடையின்றி சென்றடைவதை அரசு உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்திற்கான தகுதி அளவுகோலாக குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வருமான வரம்பிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே இலவச சிலிண்டர் திட்டம் பொருந்தும் என்றும் முதலமைச்சர் விஜய் தெளிவாக விளக்கியுள்ளார்.

You May Also Like

More From Author