சீனாவின் துணை அரசுத் தலைவர் ஹான்சேங் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், சீன-இந்திய எல்லைப் பிரதச்சினைக்கான இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதியுமான அஜித் தோவலுடன் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்து பேசினார்.
அப்போது ஹான்சேங் கூறுகையில், சீனாவும் இந்தியாவும் பெரிய அண்டை நாடுகளாகவும் முக்கியமான புதிய வளரும் நாடுகளாகவும் இருக்கின்றன. நெடுநோக்கு வாய்ந்த மற்றும் நீண்டகால பார்வையில் இரு நாட்டுறவைக் கருத்தில் கொண்டு கையாள வேண்டும். பலதரப்பு ஒத்துழைப்பை நெருங்கி, கருத்து வேற்றுமையை உரிய முறையில் தீர்த்து, இரு நாட்டுறவின் தொடர்ச்சியான நிதானமான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
தோவல் கூறுகையில், சீனாவுடன் ஒன்றுக்கு ஒன்று நலன்தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, எல்லைப் பிரச்சினையை உரிய முறையில் கையாண்டு, இரு தரப்புறவு புதிய முன்னேற்றத்தைப் பெறுவதை முன்னேற்ற இந்தியா விரும்புவதாக தெரிவித்தார்.
