டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு: 400 பேர் கொண்ட குழுவுடன் சீனா அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகை  

Estimated read time 1 min read

டெல்லியில் வரவிருக்கும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ குழுவுடன் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டிற்கு பிறகு சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
2019-இல் 200-க்கும் குறைவான அதிகாரிகளுடன் வந்திருந்த நிலையில், இந்த முறை 400 அதிகாரிகள் கொண்ட பிரம்மாண்ட குழுவுடன் அவர் வருகை தருவது இரு நாடுகளுக்கிடையேயான உறவில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author