சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சிஜிடிஎன் நிறுவனம் அண்மையில் உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் இணையக் கருத்து கணிப்பின் படி, சீனா மாபெரும் கொள்முதலாளராகவும் மாபெரும் விற்பனையாளராகவும் உலக வர்த்தகத்துக்கு வலுவான உறுதித்தன்மையை அளித்துள்ளது என்று 87 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனா தயாரித்த நுண்ணறிவு வசதிகள், மின்னாற்றல் வண்டிகள், அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவை இணையவாசிகள் அதிக ஆர்வம் செலுத்திய பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. மேலும், சீனாவின் ஏற்றுமதிப் பொருட்களில் பெரும்பாலானவை இதர நாடுகள் தயாரிக்க முடியாத அல்லது உற்பத்திச் செலவு மிக அதிகமான பொருட்களாகும் என்றும், இது சர்வதேச வேலைப் பிரிவு மற்றும் ஒப்பீட்டு நன்மைகளின் இயல்பான விளைவாகும் என்றும் 80.2 விழுக்காட்டினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
