சீன அரசவை தலைமை அமைச்சர் லீ ச்சியாங்கின் அழைப்பை ஏற்று, கனடாவின் தலைமை அமைச்சர் மார்க் கார்னி ஜனவரி 14ம் நாள் முதல் 17ம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் போது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கார்னியைச் சந்தித்துரையாடினார்.
பின்னர் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில், சீன-கனடா உறவின் வழிகாட்டல் கோட்பாட்டையும் கொள்கையையும் மீண்டும் வலியுறுத்தினர். ஒரே சீனா என்ற கொள்கை குறித்த வாக்குறுதியில் நீண்டகாலமாக ஊன்றி நிற்பதை கனடா மீண்டும் உறுதிப்படுத்தியது. உயர்நிலை சீன-கனடா நிதி நெடுநோக்கு பேச்சுவார்த்தையை மீட்டெடுக்க இருவரும் முடிவெடுத்துள்ளனர். சீன-கனடா பொருளாதாரம் மற்றும் வர்த்தகக் கூட்டாளியுறவையும், தூய்மை எரியாற்றல், பாரம்பரிய எரியாற்றல் அகழ்வு முதலிய துறையிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனர். மக்கள் தொடர்பானது, இரு தரப்புறவின் அடிப்படையாகும். புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுக்கும் வகையில், மனித பரிமாற்றத்தை அதிகரிக்க ஒப்புக்கொள்வதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். பலதரப்புவாதத்துக்கும், சர்வதேச விவகாரங்களில் ஐ.நா ஆற்றும் மைய பங்கிற்கும் ஆதரவு அளிப்பதாகவும் இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.
