ஒருதரப்புத் தடை நடவடிக்கை மேற்கொள்வதற்கு சீனா எதிர்ப்பு

ஈரானின் மீது புதிய சுற்று தடை நடவடிக்கை மேற்கொள்வதென அமெரிக்கா அண்மையில் அறிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ச்சியேன் கூறுகையில், சர்வதேசச் சட்டம் ரீதியான ஆதாரம் மற்றும் ஐ.நா பாதுகாப்பவையின் அங்கீகாரம் எதுவம் பெறாத நிலையில் ஒருதரப்புத் தடை நடவடிக்கையைச் சட்ட விரோதமாக மேற்கொள்வதற்கு சீனா கண்டிப்பான முறையில் எதிர்க்கின்றது என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் தொடர்புடைய தடைப் பட்டியலில் சீனாவைச் சேர்ந்த சில கூட்டு நிறுவனங்கள் உள்ளன. இது குறித்து செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த லின்ச்சியேன், சீனாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு சர்வதேசச் சட்டத்தின் கட்டுக்கோப்புக்குள் மேற்கொள்ளப்படுகின்றது. இது சீர்குலைக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்டார். சொந்த நாட்டின் உரிமை மற்றும் நலன்களைப் பேணிக்காக்கத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள சீனா தயாராகியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author