மாற்றுவோம், மாறுவோம் : புதிய வசதிகளுடன் வீ தி லீடர்ஸ் இணையதளம்..!

Estimated read time 1 min read

தமிழக பாஜ., முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை தொடங்கி உள்ளார்; விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார். தனது அமைப்பின் சார்பில், மாதம் ஒரு சமூகப்பணி என மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம், தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார்.கன்னியாகுமரி, துாத்துக்குடி கடற்கரைகளிலும், மதுரை வைகை ஆற்றிலும், அண்ணாமலை தலைமையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பினர் துாய்மைப் பணி மேற்கொண்டனர். தனது இயக்கத்தில் சேருவதற்கு, அண்ணாமலை அறிமுகம் செய்துள்ள இணையதளத்தில் தற்போது வரை 19.60 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

இந்நிலையில் இயக்கத்தின் இணையதளம் குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எங்களுடைய இணையதளம் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதில் உள்ள புதிய அம்சங்களை ஆராய்ந்து பயன்பெறுங்கள். மாறுவோம், மாற்றுவோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

You May Also Like

More From Author