இவ்வாண்டின் வசந்த விழா விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 8 விழுக்காடு அதிகமாக உள்ளது என்று தொடர்புடைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பெய்ஜிங், குவாங்தொங், ஆன்ஹுய், ஃபூச்சியேன் ஆகிய பிரதேசங்கள் பயணிகளால் மிகவும் வரவேற்கப்படும் பிரதேசங்களாக உள்ளன.
மேலும், பனித் தொடர்பான பயணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த விடுமுறையில், வட சீனாவில் அமைந்துள்ள ஹார்பின் நகருக்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 6 விழுக்காடு அதிகரித்தது.
240 மணி நேர விசா விலக்குக் கொள்கையின் பயனாக, இக்காலத்தில் சீனாவில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அவர்களில் தென் கொரியா, இந்தோனேசியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் அதிகம். புள்ளிவிவரங்களின்படி, தென்கிழக்காசிய பயணிகள் ஷாங்காய், செங்து, குவாங்சோ ஆகிய தெற்கு நகரங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பயணிகள் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பெரிய நகரங்களை விரும்புகின்றனர்.
தவிரவும், நாடளவிலான 4522 பாரம்பரிய கிராமங்களில் சுமார் 8600 விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவை 3 கோடிக்கும் அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளன.