தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பான மேட்டூர் அணை திறப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான TET தேர்வு விலக்கு தொடர்பான முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ கோவி செழியன், “டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். மேட்டூர் அணை திறப்பு குறித்து அரசு அறிவிக்க இயலுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், “காவிரியில் நீர் திறப்பது மற்றும் மேட்டூர் அணையைத் திறப்பது தொடர்பாகக் கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்” என்று உறுதியளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
