16ஆவது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் எரியாற்றல் துறை அமைச்சர்கள் கூட்டம் 10ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. சீனத் துணைத் தலைமையமைச்சர் டிங் சுயெசியாங் இதில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில்,
எரியாற்றல் பாதுகாப்புக்கான சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் புதிய நெடுநோக்கு வழிக்காட்டலின் கீழ், சீன எரியாற்றல் துறையின் உயர்தரமுள்ள வளர்ச்சி மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. ஏபெக் அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் நடைமுறையான எரியாற்றல் ஒத்துழைப்பில் சீனா ஆழமாகப் பங்கெடுத்து, பிராந்திய எரியாற்றல் வளர்ச்சியை பெரிதும் விரைவுபடுத்தி, உலகின் எரியாற்றல் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று தெரிவித்தார்.
பல தரப்புகளுடன் இணைந்து, உலகின் எரியாற்றல் பாதுகாப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பொது நலன் மற்றும் கூட்டுப் பகிர்வை வலுப்படுத்துதல், புத்தாக்க ஒத்துழைப்பை விரிவாக்குதல், ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு மேலாண்மையை வலுப்படுத்துதல் ஆகிய 3 முன்மொழிவுகளை அவர் முன்வைத்தார்.
