வசந்த விழா விடுமுறையின் போது விற்பனையில் ஏற்றம்

Estimated read time 1 min read

வசந்த விழாவிற்கான மகிழ்ச்சியான ஷாப்பிங் என்ற தலைப்பில், சீன வணிக அமைச்சகம் தொடர்புடைய துறைகள் மற்றும் உள்ளூர் அரசுகளுடன் இணைந்து நடத்தும் சிறப்பு நடவடிக்கையின் மூலம், சீன வசந்த விழா விடுமுறையின் முதல் இரண்டு நாட்களில் நாடு முழுவதும் வலுவான பண்டிகை சூழ்நிலையும் விற்பனையில் ஏற்றமும் காணப்பட்டுள்ளன.

வணிக தரவுகளின்படி, 15, 16 ஆகிய இரண்டு நாட்களில், நாடு முழுவதும் உள்ள முக்கிய சில்லறை விற்பனை மற்றும் உணவு நிறுவனங்களின் சராசரி தினசரி விற்பனை தொகை முந்தைய ஆண்டை விட 10.6 சதவீதம் அதிகமாகும்.

டிரேட்-இன் எனும் பழையதை விற்று புதியதை வாங்கும் திட்டத்தின் கீழ் நுகர்வு தேவை அதிகரித்துள்ளது. பிப்ரவரி 15ஆம் நாள் வரை, 2026ஆம் ஆண்டு நுகர்வு பொருட்களின் டிரேட்-இன் திட்டம் 2 கோடியே 69 லட்சத்து 5 ஆயிரம் மக்களுக்கு பயனளித்து, 19 ஆயிரத்து 51 கோடி யுவான் மதிப்புள்ள விற்பனையை தூண்டியுள்ளது. மேலும், பசுமை, அறிவார்ந்த மற்றும் ஆரோக்கியமான தயாரிப்புகளுக்கான நுகர்வு தேவையும் வலுவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author