உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு புதிய வளர்ச்சி வாய்ப்பை கொண்டு வரும் பிரிக்ஸ் ஒத்துழைப்பு

18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு செப்டம்பர் 12, 13 ஆகிய நாட்களில், இந்தியாவின் புதுதில்லியில் நடைபெறவுள்ளது. இவ்வாண்டு, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறை நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 20 ஆண்டுகளில், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் அதிகரித்து வருவதோடு, அதன் கட்டுக்கோப்புக்குள் ஒத்துழைப்பு துறைகள் மேலும் விரிவாகி வருகின்றன. உலகளாவிய தெற்கு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளுக்கு இது புதிய வளர்ச்சி வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது.

2024ஆம் ஆண்டில் பிரிக்ஸ் விரிவாக்கத்திற்குப் பிறகு நடைபெற்ற முதலாவது உச்சிமாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்துகையில், பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பின் உயர்தர வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என தெரிவித்ததோடு, தொடர்ச்சியான விரிவான நடவடிக்கைகளையும் அறிவித்தார். இது சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்து ஆக்கப்பூர்வ மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.  

இந்தியா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் தத்தமது நவீனமயமான வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் நடைபோட்டு வருகின்றன.

பிரிக்ஸ் நாடுகள் பல துறைகளில் மூலவள மேம்பாடுகளையும் ஒன்று மற்றதன் தேவையை நிறைவு செய்வதில் அதிக வாய்ப்புகளையும் கொண்டுள்ளன. இவை, இவ்வமைப்பின் கீழ் கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்கான முக்கிய காரணிகளாகும் என்று இந்திய சிந்தனை கிடங்கான Observer Research Foundation நிதியத்தின் முன்னாள் தலைவர் சுதீந்ரா குல்கர்னி கருத்து தெரிவித்தார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு, எண்ணியல் பொருளாதாரம், முன்னேறிய தயாரிப்பு உள்ளிட்ட புதிதாக வளரும் தொழில் துறைகளில், தொழில் நுட்பம் மற்றும் சந்தையை சீனா ஆக்கப்பூர்வமாக திறந்து, வேறு ஒத்துழைப்புக் கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழில் நுட்ப புத்தாக்க ஆற்றலை அதிகரித்து வருகிறது.

You May Also Like

More From Author