பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு மேலும் பெரிய பங்களிப்பு

2026ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டு தலைவர்களின் 18 ஆவது உச்சிமாநாட்டை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலகின் 41 நாடுகளைச் சேர்ந்த 12250 பேர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. கடந்த சில ஆண்டுகளில் சர்வதேச விவகாரங்களில் பிரிக்ஸ் நாடுகளின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக இதில் பங்கேற்ற 60 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தார்கள்.

மேலும், உலக நிர்வாக அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை முன்னேற்றுவதற்கும் பிரிக்ஸ் நாடுகள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆற்றியுள்ளது என்று 63 விழுக்காட்டினர் கூறினர். சர்வதேச ஒழுங்கு மேலும் நியாயமான திசையை நோக்கி வளர்வதை முன்னேற்றுவதற்கு உறுப்பினர்களை விரிவாக்கிய பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பு மேலும் உறுதுணையாக இருக்கும் என்று 61.6 விழுக்காட்டினர் கருதினர்.

 

You May Also Like

More From Author