சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜனவரி 3ஆம் நாள் முற்பகல், சீனப் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சிச் சாதனை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது.
2024ஆம் ஆண்டில், சீனாவின் புத்தாக்க ஆற்றல் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இது, சீனப் பொருளாதாரத்தின் பழைய உந்து ஆற்றலிலிருந்து புதிய ஆற்றலாக மாறுவதை விரைவுபடுத்தியது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஒரு புறம், முக்கிய அறிவியல் தொழில் நுட்பத்தின் அடிப்படை வசதி அமைப்பு முறையின் கட்டுமானம் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு உலக புத்தாக்க குறியீட்டுப் பட்டியலில் 11ஆவது இடத்தை சீனா பிடித்துள்ளது.
இன்னொரு புறம், புத்தாக்கத்தின் மூலம் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பங்கு இடைவிடாமல் விரிவாகி வருகிறது. உயர் அறிவியல் தொழில் நுட்பம் கொண்ட ஆக்கத் தொழில் துறையின் அதிகரிப்பு மதிப்பின் வளர்ச்சி வேகம், இத்தொழில் துறையின் ஒட்டுமொத்த அளவை விட அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.