2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

Estimated read time 1 min read

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறிவு என்பதே ஒரு தனித்துவமான சித்தாந்தம் என்றும், அதை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தும்போது, உண்மையான அர்த்தத்தை அது இழந்துவிடுகிறது என்றும் தெரிவித்தார்.

வரலாற்றை மீட்டெடுப்பது என்பது கடந்த காலத்தை அழிப்பது அல்ல, மாறாக உண்மையான வரலாற்று உண்மைகளை இந்தியப் பார்வையில் வழங்குவதாகும் என்ற அமித் ஷா,தங்களுடைய பாரம்பரியத்தைப் புறக்கணிக்கும் நாடுகள் அழிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம் பெண்களுக்குச் சம உரிமையை உறுதி செய்வதற்காக எங்கள் அரசு ‘முத்தலாக்’ முறையை ஒழித்தது. ஒரு துளி ரத்தம் சிந்தாமலும், ஒரு குண்டு கூட பாய்ச்சாமலும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததாக தெரிவித்தார்.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பிரிக்க முடியாத அங்கம் என்றும், சில மாநிலங்கள் ஏற்கனவே பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தலைமையிலான அரசுகள் ஆட்சியில் உள்ள 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதே நோக்கம் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author